அம்பானி போன்ற பெரும் முதலாளிகள் லாபம் ஈட்ட, மத்திய அரசு ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை குற்றச்சாட்டினார். கட்டண சேனல்களின் விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி, சென்னையில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் போராட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய செல்வபெருந்தகை, கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.