தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, திமுகவின் தேர்தல் அறிக்கையாக உள்ளதாக சீமான் விமர்சித்தார். தேர்தல் வருகிறது என்பதற்காக திமுகவின் தேர்தல் அறிக்கையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தவர், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.