தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் புழக்கத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த திங்கள் கிழமை மூன்று பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்றார்.