படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் அமைதியாக பேரணியாக சென்ற ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார்.