செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஊதியம் வழங்காததை கண்டித்தும்,பணி நியமனம் செய்யாததை கண்டித்தும் ஆசிரியர்கள் முழக்கமிட்டனர்.