தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா திடீர் மாரடைப்பு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை ஒன்றிற்காக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு காகித ஆலை மேலாண்மை இயக்குநருமான சந்தீப் சக்சேனா வருகை தந்தார். நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவரது இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.