அன்னிய மொழிகளின் மூலமாக பண்பாட்டு தாக்குதல் நடந்தாலும், தமிழும், தமிழ் இனமும், தமிழ்நாடும் நிலைத்து நிற்பதற்கு தமிழின் வலிமையும், அதன் சிறப்பும் தான் காரணம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற முத்தமிழ்ப்பேரவை பொன் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், திரைத்துறை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.