ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கைதிகளின் மனைவிகளிடம் செல்போனில் பேசி தொல்லை கொடுத்த சிறைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கச்சேரி மேட்டில் உள்ள மாவட்ட சிறைக்கு கைதிகளை பார்க்க வரும் அவர்களது மனைவி மற்றும் உறவினர் பெண்களிடம், சிறைக் காவலர் சுரேஷ்குமார் செல்போன் எண்ணை வாங்கி பேசி தொந்தரவு செய்தார்.