திமுக தலைவரை பற்றி பேசினால் தான் பிழைப்பு நடத்த முடியும் என தெரிந்து கொண்ட விஜய், அவரை பற்றி மேடையில் பேசி கைதட்டல் வாங்கி கொள்கிறார் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சூரியன் தன் வேலையை காட்டும் போது விஜய் காணாமல் போய்விடுவார் என பேசினார்.