சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க கான்ட்ராக்டரிடம் லஞ்சம் வாங்கியதாக கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். புதுவிளை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் அமலாராணி ஆறுமுகத்திடம் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்த ஆறுமுகத்திடம், ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பி போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.