திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஆலயமாக ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் ஆலயம் விளங்கி வருகின்றன. இந்த ஆலயம் பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள சுமார் 300 அடி மலை குன்றில் மேல் அமைந்துள்ளன. மேலும் இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாக வாய் பேச முடியாத குழந்தைகள் பிரதி சனிக்கிழமை 3 வாரம் தொடர்ந்து 3முறை இந்த ஆலயத்திற்கு சென்று பெருமாளை வணங்கினால் வாய் பேசாத குழந்தைகள் நிச்சியம் வாய் பேச முடியும் என்று பக்தர்கள் ஐதீகமாக உள்ளன. மேலும் வாரம் வாரம் வாய் பேச முடியாத வெளிமாநில மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் தங்களின் குழந்தைகளை உத்தமராயர் ஆலயத்திற்கு அழைத்து வந்து நேர்த்தி கடனாக குழந்தைகளுக்கு துளசி மாலை அணிந்து அரிசி மாவிளக்கு ஏற்றி ஆலயத்தில் குழந்தைகள் அதனை சுமந்து படிகளில் ஏறி வீதிஉலா வந்தனர். மேலும் வருடா வருடம் தை முதல் வாரத்தில் தை மகர உற்சவ பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்தாண்டு தை மகர உற்சவ பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதிகாலையில் உத்தமராயருக்கு அபிஷேகம் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உற்சவ பெருமாள் அலங்கரிக்கபட்டு வீதிஉலா நடைபெற்றது. இதனை கண்டுகளிக்க வெளி மாவட்டத்திலிருந்தும் வெளி மாநிலத்திலிருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உத்தமராய பெருமாளை வணங்கி வழிபட்டனர்.இதையும் படியுங்கள் : "அரசியல் நோக்கங்களுக்காக ED, CBI பயன்படுத்தப்படுகிறது"