திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஏரிக்கரை பகுதியில் உள்ள சுயம்பு சனீஸ்வரி அம்மன் கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நான்காம் நாள் விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் லட்ச தீபம் ஏந்தி 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.