கும்பகோணம் அருகே நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அதிகாலை மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். திருவலஞ்சுழியை காளிதாஸ் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி மீது சுவாமிமலை காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அடிதடி வழக்கில் சிறை சென்ற காளிதாஸ் கடந்த வாரம் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் காளிதாஸ், வீட்டுவாசலில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.