திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அரசு அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் தனியார் பள்ளியை மூடக் கோரி கிராம மக்கள் ஜமாபந்தியில் மனு அளித்தனர்.ஆண்டார்மடம் பகுதியில் சுவாமி தயானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியாக இருந்து தற்போது விஸ்டம் பள்ளியாக செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் இல்லை என கூறப்படுகிறது.