கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு, வெங்கடேச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுக்கு திருக்கல்யாண வைபவத்தை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.