மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு அரசுத் தரப்பில் வழங்கப்பட்டிருந்த வாகனம் திரும்ப பெறப்பட்டதால், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே சென்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தின் பின்னணியில், உயர் அதிகாரிகள் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.