காரைக்காலில் பழமை வாய்ந்த ஸ்ரீராஜகணபதி ஆலயத்தில் நடைபெற்ற சூரிய பூஜை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்வாலயத்தில் பங்குனி மாதத்தில் ஒருவார காலத்திற்கு மாலை நேரத்தில் மூலவர் ராஜகணபதி மீது சூரியன் ஒளி நேரடியாக விழும். அந்த சமயத்தில் ராஜகணபதிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும்.