திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் முகாமில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவெறும்பூர் பகுதிகளில் வெள்ளம் முற்றிலுமாக வடிந்த பிறகு நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.