நெல்லையில் கவின் ஆணவக்கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், சுர்ஜித்தின் நீதிமன்ற காவலை நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, சுர்ஜித்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.