தென்மாநில மக்களின் வசதிக்காக தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு விழா மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்றத்தின் கீழமை நீதிமன்றத்தை கணினிமயமாக்க நிதி ஒதுக்கப்படும் என்றார்.