திரையுலகில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருப்பது போல, அரசியலில் தாம்தான் சூப்பர் ஸ்டார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், ரஜினியுடனான தமது சந்திப்பு பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும், தாம் இருக்கும் வரை பரந்தூரில் விமான நிலையமோ, 8 வழிச் சாலையோ, காட்டுப்பள்ளியில் துறைமுகமோ ஒரு போதும் கட்ட முடியாது என்றார்.