திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பிரையன்ட் பூங்கா மற்றும் நட்சத்திர ஏரிக்கு செல்ல ஆர்வம் காட்டிய சுற்றுலாப்பயணிகள், செல்ஃபி எடுத்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.