கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஊராட்சி செயலாளர், அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நரிமேடு ஊராட்சி மன்ற அலுவலகம் நீண்ட நேரமாக பூட்டி கிடந்த நிலையில், ஊழியர்கள் சந்தேகமடைந்து திறந்து பார்த்த போது ஊராட்சி செயலாளர் அய்யனார் தூக்கில் தொடங்கியபடி இறந்து கிடந்தது தெரியவந்தது.