திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கடந்த எட்டு மாதங்களாக போதிய குடிநீரின்றி தவித்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். செருமங்கலம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு அங்குள்ள சிறிய டேங்க் மூலம் குடிநீர் விநியோகிகப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழாயில் குறைந்த அளவு நீரே வருவதால் தண்ணீர் பிடிப்பதிலேயே பாதி நேரம் செலவிடுவதாக கூறும் மக்கள் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.