கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தார்ச்சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், ஒப்பந்த காலம் முடிந்தும் பணி முடியாமல், ஜல்லிகற்கள் சிதறியுள்ள சாலையில் சிரமத்துடன் செல்வதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிந்தலவாடி ஊராட்சிக்குட்பட்ட விட்டுக்கட்டியில் இருந்து கீழசிந்தலவாடியை இணைக்கும் 460 மீட்டர் தூர தார்ச்சாலையை சுமார் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறு பாலத்துடன் மேம்படுத்தும் பணி கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்டது. செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் முடிவடைய வேண்டிய பணியை இன்னும் முடிக்காமல், 10 நாட்களுக்கு முன்புதான் சிமெண்ட் கலவை கொட்டப்பட்டதாக கூறப்படுகிறது.