திருத்தணி அருகே அருங்குளம் பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டத்தில் திடீரென்று தற்காலிக பந்தல் சாய்ந்த நிலையில் 100 நாள் பணியில் இருக்கும் பெண்களை வைத்து சரிசெய்தனர். கிராமசபை கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்க வேண்டிய இடத்தில் பெண்களையே வேலை வாங்கிய வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.