திருப்பூர் அண்ணா நகர் பகுதியில் திடீரென திறக்கப்பட்ட கார் கதவு, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை வேலையை முடித்து விட்டு சொந்த ஊர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் அண்ணா நகர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்றிருந்த கார் கதவு திறந்ததில் பாலகிருஷ்ணன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் கழுத்தில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.