சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட மண் அரிப்பால் நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. காரைக்குடி நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேவகோட்டை நெடுஞ்சாலை வழியாக ரஸ்தா சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.இந்நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் வந்து செல்லும் தேவகோட்டை நெடுஞ்சாலையில் குடிகாத்தான் கண்மாய் அருகே பாதாளச் சாக்கடையில் மண் அரிப்பு ஏற்பட்டு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதன்காரணமாக அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பல கிலோ மீட்டர் தூரம் வாகன ஓட்டிகள் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது.