சென்னையில் இரவு மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. அலமாதி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, எழும்பூர், மயிலாப்பூர், கோடம்பாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டன. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, அனுப்பம்பட்டு, கம்மவார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் தடைபட்டது. இதனால் கடும் அவதிக்குள்ளான மணலி காமராஜர் சாலையில் வசிக்கும் பொது மக்கள், அங்குள்ள மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சில மணி நேரங்களில் மின் விநியோகம் சீரானதால் மக்கள் நிம்மதியாக தூங்கச் சென்றனர்.