சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதால், சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான எஸ்.வி.மங்கலம், பிரான்மலை உள்ளிட்ட இடங்களில் காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், விவசாய பணிகளுக்கு உதவும் என்பதால் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.