நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் கனமழை காரணமாக, அங்குள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புலிகள் கணக்கெடுப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை வன சோதனைச்சாவடி மூடப்பட்டுள்ளதால், மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.