திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் கீழ் தளத்தில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்த நிலையில், கணினி, பணம் எண்ணும் கவுண்டிங் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.