தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மணிநகர் பகுதியில் உள்ள அட்டை கம்பெனியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைகள் எரிந்து சாம்பலானது. அட்டை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.