ஈரோடு மாவட்டம் சூலைப் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான கார் வீரப்பச்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, முன் பக்கம் உள்ள பேட்டரி சர்க்யூட் காரணமாக திடீரென புகை எழுந்து மளமளவென தீ எரிந்தது.