விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் இயந்திரம் தீயில் எரிந்து சேதமடைந்தன. மதுசூதனன் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலையில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வந்த நிலையில், திடிரென தீப்பெட்டி செய்யும் இயந்திரத்தில் ஏற்பட்ட உராய்வினால் தீ பற்றியது.