வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் தீக்கிரையாகின. மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஊதுபத்தி தொழிற்சாலை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று மூடப்பட்டிருந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.