மதுரை கீரைத்துறை அருகே புதுமாகாளிபட்டியில் கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏடிஎம் இயந்திரமும் அதில் இருந்த பணமும் முற்றிலும் எரிந்து கருகின. மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில், ஏடிஎம் மையம் எரியத் தொடங்கியவுடன் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீபாவளியையொட்டி ஏடிஎம் இயந்திரதில் பணம் முழுவதுமாக நிரப்பப்பட்டிருந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் வந்து தீணை அணைப்பதற்குள் மளமளவென பற்றியதுல் அனைத்தும் எரிந்தன.