புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த வார்டில் நோயாளிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் மருத்துவ உபகரணங்கள் எரிந்து சேதமான நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.