ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட மின்சார ரயில், சிறிது தூரம் சென்றதும் கோளாறு காரணமாக நின்றது. உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து ரயிலுக்கு மின்சாரத்தை கடத்தும் இணைப்பில் ஏற்பட்ட கோளாறை அதிகாரிகள் சரிசெய்தனர்.