திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி ரயிலில் சென்ற பயணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் திருத்தணி கோயிலுக்கு சென்று திரும்பிய போது வலிப்பு ஏற்பட்டது.