சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2024-ம் கல்வியாண்டு நடைபெற்ற நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று கலந்தாய்வு நடத்தி சான்றிதல் சரிபார்ப்பு பணி நிறைவடைந்தும் பணி ஆணை வழங்கவில்லை என குற்றம்சாட்டி 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வற்புறுத்தியதின் பேரில் ஆர்ப்பாட்டத்தை பாதியிலேயே கைவிட்டு கலைந்து சென்றனர்.