திருவண்ணாமலை ஆரணி அருகே தனியார் பள்ளி திடீரென மூடப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களுடன் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணமங்கலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேல்ஸ் வித்யாஷ்ரம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில். காலாண்டு விடுமுறை முடிந்து வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். அப்போது, எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்து மாணவர்களுடன் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓராண்டுக்கும் மேலாக ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் சரியாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.