செய்யாறு தூய வியாகுல அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம், கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆற்காடு சாலையில் உள்ள தூய வியாகுல அன்னை ஆலயத்தின் 80ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி பங்குத்தந்தை சுதர்சன் ஆண்டனி தலைமையில் நடைபெற்றது. ஆலய வளாகத்திலிருந்து கையில் கொடியை ஏந்தியவாறு மங்கல வாத்தியங்களுடன் வலம் வந்து ஆலயத்தின் வளாகத்தில் கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேலூர் மறை மாவட்ட முதன்மை குரு பேரருட்பணி ஜான் நிக்கோலாஸ், அருட்பணி ஸ்டீபன், பிரேம்குமார் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்து பெருவிழாவை தொடங்கி வைத்தனர். கூட்டு திருப்பலி, நற்கருணை விருந்து உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனை நடைபெற்றது.