பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் பல மணி நேரம் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கவரப்பேட்டை மற்றும் பொன்னேரி இடையே சிக்னல் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் இன்றும் நாளையும் மதியம் 1 மணி 20 நிமிடம் முதல் மாலை 5 மணி 20 நிமிடம் வரை 19 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், 2 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.