தீபாவளி தினத்தன்று, ஞாயிறுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி தினமான வியாழக்கிழமை அன்று, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை சென்று வரும் புறநகர் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.