ஈரோடு மாவட்டம் பவானி அருகே சி.மேட்டுப்பாளையம் பகுதியில் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உரம், தனியார் பெயரில் விற்பனையானதை கண்டு வேளாண் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கேரளாவுக்கு கடத்துவதற்காக, குடோனில் பதுக்கி வைத்திருந்த 684 யூரியா உர மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.