சென்னை ராமாபுரத்தில் அடுத்தடுத்து 3 கடைகளில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் அங்குள்ள மக்களை தீயணைப்பு துறையினர் வெளியேற்றினர். பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென பற்றி எரிந்த தீ, அருகில் உள்ள பர்னிச்சர் குடோன் மற்றும் கார் மெக்கானிக் கடைகளுக்கு பரவியது.