புதுக்கோட்டை பாசில் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 160 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இன்று அன்னசத்திரம் பகுதியில் 89 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அன்னசத்திரம் ஜே. என் நகரை சேர்ந்த கார்த்திகா என்பவர் பெங்களூரு சென்று விட்டு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 89 சவரன் தங்க நகை, 170 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்த புகாரில் மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.