மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி மாத பெருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. ஆறு படை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சன்னதி தெருவில் அமைந்துள்ள, சொக்கநாதர் கோயில் முன்பு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பட்டர் வீரபாகு ஏறி நின்று, சுவாமியின் சூரசம்ஹார லீலையை பக்தர்களுக்கு எடுத்துரைத்தார்.