தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி திருவிழாவின் 8 ஆம் நாளில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் பச்சைக்கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். பச்சை சாற்றி கோலத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.